செங்கலடி பொதுச் சந்தையில் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
மட்டக்களப்பு – செங்கலடி பொதுச்சுகாதார பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் செங்கலடி பொதுச்சந்தையில் தற்போது அதிகமாக மக்கள் ஒன்று கூடி பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதே வேளை சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலும், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையிலும் செங்கலடி பொதுச்சந்தையில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.
இதனால் பொதுச்சந்தையில் அதிகமாக பொது மக்கள் ஒன்று கூடுவதையும், சன நெரிசலையும் அதிகமாக அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் இன்று செங்கலடி பொதுச்சந்தைக்கு திடீர் சேதனையில் ஈடுபட்ட செங்கலடி பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா உட்பட்ட ஏறாவூர் பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவேறுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு சன நெரிசலான இடங்களில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் திறப்பதை முற்றாகத்தவிர்க்க வேண்டும் எனவும் வர்த்தநடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் சுகாதாரத்துறையினர் வர்த்தகர்களுக்குக் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்களும்
இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே நோய்த்தாக்கத்தை
குறைத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதாரத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.







அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
