தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிக்குள் குழப்பம்: ஆகஸ்ட் 3 இல் முக்கிய தீர்மானம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை பதவியில் இருந்து மனோ கணேசன் விலகமாட்டார் என தான் நம்புவதாக கூட்டணியின் பிரதித் தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை பதவியிலிருந்து விலகவுள்ளார் என்று மனோ கணேசன் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக்குள் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மனோ கணேசனின் அறிவிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"தலைவர் மனோ, எதற்காக இப்படியொரு முடிவு எடுத்தார் என்பது குழம்பமாக இருக்கின்றது. இது கூட்டணி கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு அல்ல. செயலாளருக்கும், தலைவருக்கும் இடையிலான எழுத்து முரண்பாடே ஆகும்.
இதனைவிட, அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதும், அவற்றைத் தீர்த்துக் கொள்வதும் வழமையானது.
முக்கிய தீர்மானம்
எதிர்வரும் 3ஆம் திகதி தமிழ் முற்போக்கு கூட்டணி கூடி, இது குறித்து ஆராயவுள்ளது.
சர்வகட்சி அரசை ஸ்தாபிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அனைவருக்கும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் எனக்கும் கிடைத்துள்ளது. கூட்டணியாக இது குறித்தும் எதிர்வரும் 3ஆம் திகதி ஆராய்ந்து முடிவெடுப்போம்" என கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மனோ அறிவிப்பு |
மனோ கணேசனின் பதவி விலகல் தொடர்பில் திகாம்பரம் வெளியிட்ட தகவல் |