கூட்டணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மனோ அறிவிப்பு
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று அறிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
மலையகத் தமிழர்களும் தேசிய இனம்

"மலையகத் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.
அதற்காக மலையக அபிலாஷை ஆவணத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.
எனவே, கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி, அப்பணியை செய்ய எதிர்பார்க்கின்றேன்.
கூட்டணியில் தகுதியானவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தலைவராவார். மலையக அபிலாஷை ஆவணம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றார்.
| ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan