யாழில் கோவிட் மரணத்தால் ஏற்பட்ட குழப்பம்! விசாரணையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த ஒருவரின் சடலம் மல்லாவிக்கு கொண்டுவரப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த சடலத்தைப் பொறுப்பேற்று உரிய முறைப்படி தகனம் செய்யுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.
யாழ்பாணத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த 81 வயதான வயோதிப பெண்ணின் சடலம் குளிரூட்டி வசதிக்காகவே மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த மேற்படி வயோதிப பெண்ணின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பிலும் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்ட சடலத்தை உடைத்து உறவினர்கள் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சடலம் ஏன் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அத்துடன் உயிரிழந்த வயோதிப பெண்ணின் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தபட்டவுடன், சடலம் பாதுகாப்பான முறையில் பொலித்தீன் பையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சடலம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மல்லாவி ஆதார வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு வினவிய போதும் குறித்த சடலமானது வட மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக மின் தகனம் செய்வதற்கு ஏற்ற வசதிகள் இல்லாத நிலையில் வைத்தியசாலைகளில் சடலங்கள் தேக்கமடைந்து காணப்படுகின்றன.
இந்நிலையிலேயே, குறித்த வயோதிப பெண்ணின் சடலத்தை குளிரூட்டியில் பாதுகாக்கும் நோக்கிலேயே மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்போது, சடலம் எவ்வாறு திறக்கப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் மல்லாவி வைத்தியசாலையில் தகவல்கள் மூலம் அறிய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
