நானாட்டான் பிரதேச சபையில் ஏற்பட்ட குழப்ப நிலை! வெளியான காணொளி (Video)
நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நேற்று (14) இடம்பெற்ற போது அங்கு ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பான ஆதார பூர்வமான காணொளி காட்சிகள் வெளியாகி உள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியை தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்து போனஸ் ஆசனம் ஊடாக நானாட்டான் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட றோஜன் ஸ்டாலின் மேசையை தூக்கி தாக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
நானாட்டான் பிரதேச சபையின் 46 வது மாதாந்த கூட்ட அமர்வும், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கான சபை அமர்வும் நடைபெற்ற பொது எதிரணியினர் ஒன்றிணைந்து வன்முறை ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பகிரங்க வாக்கெடுப்பின் ஊடாக வரவு - செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் போது தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து சபையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளமை காணொளி காட்சிகள் ஊடக வெளிவந்துள்ளது.