வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டத்தில் குழப்பம் (Photos)

Sri Lanka Eelam People's Democratic Party Gazette Valikamam West Divisional Council
By Mubarak Dec 30, 2021 09:20 PM GMT
Report

இலங்கையின் இறையாண்மையை மீறமாட்டோம் என உறுதி எடுத்துவிட்டு அதை மறந்து தத்தமது இஷ்டங்களுக்கு செயற்படுவதால்தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடநேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரது வீடுகளுக்கும் வர்த்தமானியை அனுப்புவதாகவும், அதை கற்று தெளிந்துவிட்டு அடுத்துவரும் சபை அமர்வுகளில் அதற்கேற்ற முறையில் நடந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் விசேட கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற மாதாந்த சபை அமர்வு எதற்காக இடை நடுவே ஒத்திவைக்கப்பட்டது என விளக்கம் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுபினர் சிவகுரு பாலகிருஸ்ணன் தவிசாளரிடம் கோரியிருந்த நிலையில் சபையில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இந்நிலையிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்பதாக கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற அமர்வின்போது ஒரு பகுதி உறுப்பினர்களால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும் அன்றைய சபையின் அமர்வை உபதவிசாளர் மேற்கொண்டிருந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற சட்ட வரையறைக்கு அமைவாக அவர் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் குறித்த சபையின் அமர்வை விட்டுபல உறுப்பினர்கள் வெளியேறி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆனாலும் சபையில் சில உறுப்பினர்கள் இருந்துள்ளனர். சபையை முன்கொண்டு செல்ல கோரம் இல்லாமையால் குறித்த உறுப்பினர்கள் கூடத்தை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என கூறி ஒத்திவைக்க உபதவிசாளரிடம் கோரியுள்ளனர்.

இதனால் உப தவிசாளர் சபையை இன்றைய தினம் வரை ஒத்திவைத்திருந்தார்.

ஆனாலும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டவரை முறைகளுக்கு அமைய குறித்த போராட்டத்தை நடத்த அங்கிகாரம் இன்றி உறுப்பினர்கள் சென்றதால் தான் அந்த கூட்டம் இன்றைய தினம் வரை ஒத்திவைக்க காரணமானது என்றும் இது எவ்வகையில் நியாயமானது என்று சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு விளக்குமளிக்குமாறும் உறுப்பினரால் தவிசாளரிடம் கோரப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டம் உறுப்பினர்களின் விருப்புகளுக்கு அமைய நிடைபெற்ற தென்றும், ஆனாலும் சபையில் அதை தீர்மானமாக எடுக்காது சென்றமை சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு அன்று தலைமை வகித்த உபதவிசாளருக்கு தடையாக இருந்ததாகவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழப்பங்கள் ஏற்படாதிருப்பதற்காக அவர் சபையை இன்றையதினம் ஒத்திவைத்திருந்தாதாகவும் தெரிவித்ததுடன் சபையின் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்கள் அந்த சத்தியப்பிரமாணத்தை தற்போது மறந்துவிட்டார்கள் என்றும் அதை அவர்கள் மீண்டும் நினைவூட்டிக் கொள்வதற்காக அந்த வர்த்தமானி அறிவிப்பை பிரதியெடுத்து உறப்பினர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் மயானங்களை எல்லை நிர்ணயம் செய்த பின்னரே அபிவிருத்திகள் செய்ய வேண்டும். அவ்வாறு எல்லை நிர்ணயம் இல்லாத மயானங்களுக்கு அபிவிருத்திகளை முன்னெடுப்பதால் நிலையான அடைவு மட்டத்தை எட்ட முடியாது எனவும் சிவகுரு பாலகிருஸ்னன் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கான மயான அபிவிருத்தி சபையை கட்டமைத்து உடலங்களை தகனமோ அல்லது அடக்கமோ செய்ய அறவீடாக 1000 ரூபா நிதியையும் வரையறை செய்து அந்த நிதியைக் கொண்டே மயானங்களின் தூய்மையை முன்னெடுக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்ட்டது. எல்லை வரையறையை துறைசார் தரப்பினருக்கு வலியுறுத்தி விரைவில் தீர்வை காண முயற்சிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதுவேளை சபையின் ஆழுகைக்குள் 18 மயானங்கள் இருக்கின்ற போதும் ஒரு சில மயானங்களை தவிர அதிகமானவை எல்லை வரையறை செய்யப்படாத நிலையிலேயே உள்ளது என்றும் இதனால் அவை அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே சேவைகள் முன்னெடுக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பிரதேசத்தின் அபிவிருத்தி நிறைவுபெறாது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனிடையே கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தனால் முன்மொழிவொன்றும் சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அது தொடர்பில் முதற்கட்டமாக அறிவிப்புகளை விடுப்பதென்றும் அதன்பின்னர் அதற்கான குழு ஒன்றை அமைத்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை எதிர்வரும் புதிய ஆண்டின் முதலாவது கூட்டத்தினத்தன்று முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவும் சபை ஏகமனதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

GalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US