பாடசாலை கட்டுமான மோசடியில் முரண்பட்ட ஆதாரங்கள் - பழைய மாணவர் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Jul 30, 2026 01:49 PM GMT
Report

யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக, கல்லூரியின் பழைய மாணவர் சதாசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (30.07.2026) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மலேசியக் கடல் பகுதியில் தொடரும் ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை!

மலேசியக் கடல் பகுதியில் தொடரும் ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை!

விசாரணையில் வெளியான மோசடிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலையில் காணப்பட்ட பழமையான மதிலை இடிப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் இடிக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மதிலை அமைப்பதற்காக பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முறைகேடான வகையிலும் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, வலிகாமம் கல்வி வலயத்தினால் இரண்டு கடிதத் தலைப்புகளில் கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றில் திகதி குறிப்பிடப்படாமல் உயர் அதிகாரியின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

பாடசாலை கட்டுமான மோசடியில் முரண்பட்ட ஆதாரங்கள் - பழைய மாணவர் குற்றச்சாட்டு | Conflicting Evidence In School Construction Scam

அத்துடன், குறித்த மதிலை மீளப் புனரமைப்பதற்கு மாத்திரமே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரில் மதில் முழுமையாக இடிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது. மேலும், தற்போது இடம்பெற்ற 150ஆவது ஆண்டு விழாவுக்கான நிதி, பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.

போதிய அனுமதிகள் இன்றி கட்டப்பட்ட மதில்

எமது முறைப்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

குறித்த மதிலை கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே, தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பாடசாலை கட்டுமான மோசடியில் முரண்பட்ட ஆதாரங்கள் - பழைய மாணவர் குற்றச்சாட்டு | Conflicting Evidence In School Construction Scam

ஆகவே, குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதுடன், புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய அனுமதிகள் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் மீது வெறுமனே நடவடிக்கை எடுப்பது மாத்திரம் போதாது.

மாறாக, இதுபோன்ற தவறுகள் இனிமேல் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.

அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி

அரசமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறி நீதித்துறையைச் சீரழிக்க அரசு முயற்சி! சந்திம வீரக்கொடி

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பின்னணியில் இருந்த இரகசிய திட்டங்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பின்னணியில் இருந்த இரகசிய திட்டங்கள் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!

YOU MAY LIKE THIS VIDEO



மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US