மொட்டு கட்சியில் வலுக்கும் மோதல்! அமைச்சர்கள் எடுத்த தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கை பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடுவதற்கு ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் குழுவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக அந்த குழுவினர் பொதுஜன பெரமுனவின் அரசியல் விவகாரங்களைத் தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நாட்களில் கட்சி அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களுக்குக் கூட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |