சஜித் அணிக்கும் ரணவக்க அணிக்கும் இடையில் முரண்பாடு?
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையில் இயங்கும் 43வது படைப்பிரிவு என்ற அமைப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக பிளவுப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பீட கூட்டங்களின் போது, 43 வது படைப்பிரிவு அமைப்பை கலைத்து விட்டு, கட்சியை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குமாறு சஜித் பல முறை சம்பிக்க ரணவக்கவிடம் கோரியுள்ளார்.
எனினும் அவர் இதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் அண்மையில் நடைபெற்ற 43 வது படைப்பிரிவு அமைப்பின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டாம் என சஜித் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன் காரணமாக அந்த அமைப்புக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி தனியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கிலேயே 43 வது படைப்பிரிவு அமைப்புக்கு தனியான தேசிய நிலையம் ஒன்றை அமைத்து, வெகுஜன அமைப்பாக உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சம்பிக்க ரணவக்கவின் அமைப்புடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது குறித்து அவருடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri