யாழில் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட கடற்படையினர் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த தீடிர் சுற்றி வளைப்பானது இன்று(19.01.2024) அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இதன் போது கடற்றொழிலாளர்களையும், அவர்களது கடற்றொழில் சொத்துக்களையும் சோதனை செய்த கடற்படையினர் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே கடற்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அதிகளவு தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri