வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 457 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னாரில் இன்று காலை ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்த 58 வயதுடைய ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி,கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளத்தில் இருவருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam