பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம்! - திருக்குமார் நடேசன் வாக்குமூலம்
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் (Thirukumaran Nadesan) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் குறித்து வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நேற்று காலை 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
முன்னதாக கடந்த கடந்த வாரமும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், உரிய ஆவணங்களை புலனாய்வாளர்களிடம் சமர்ப்பிக்க மேலும் அவகாசம் கோரியிருந்தார்.
இதன்படி நேற்றைய தினம் அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் (Nirupama Rajapaksa) மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தற்போது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
