நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மதுசுதனைக் களமிறக்குகின்றது கூட்டமைப்பு!
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனை நிறுத்துவதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் தவிசாளர் தா.தியாகமூர்த்தி தனது பதவியை இழந்திருந்தார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam