சாவகச்சேரியில் பொலிஸாரின் அதிரடி சோதனை! பென்ஸ் காருக்குள் ஆயுதங்களும் போதைப்பொருளும்
சாவகச்சேரி பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த "பென்ஸ்" ரக காரை பொலிஸார் மறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதனுள் மான் கொம்பில் கைப்பிடி செய்த வாள் ஒன்றும் நக்கிள்ஸ் கிளிப் ஒன்றும் காணப்பட்டதுடன் ஹெரோயின் போதைப்பொருளும் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் சோதனை
அதை அடுத்து காரில் இருந்த இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை செய்தால் , ஒருவர் கடந்த வருடம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வழக்கு தவிர்ந்த வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றவியல் வழக்குகள் நீதவான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.