யாழில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான இலவச கருத்தரங்கு(Photos)
கல்விப்
பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி
கருத்தரங்குகள் தமிழ் மக்கள் கூட்டணியின், கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கானது இன்று (21.05.2023) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச் சந்தியிலுள்ள மகா கணபதி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய யாழ்.இந்துக் கல்லூரி கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜா ஞாபகார்த்தமாக தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினர் குறித்த இலவசக் கல்வி கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.
விசேட கருத்தரங்கு
இதன்போது கருத்தரங்கில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு கொழும்பு பிரபல பாடசாலைகளின் வினாத்தாளுடன் கூடிய கையேடுகள் மற்றும் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்குத் தேவையான எழுது கருவிப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் வ.பார்த்தீபன், கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜாவின் குடும்பத்தினர், அனுசரணையாளர்கள், வளவாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கொண்டதாக அமைந்த இக்கருத்தரங்கு நாளை திங்கட்கிழமை (22.05.2023) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் - வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள DCM கல்வி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |