ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது! கோட்டாபய
ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் துயர மரணம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வருத்தம் தெரிவிப்பு

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜப்பானின் முன்னாள் பிரதமர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், தங்கள் பிரார்த்தனைகள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் ஜப்பான் மக்களுடனும் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு
I'm shocked and saddened by the news of the shooting of former PM Shinzo Abe. Whilst wishing him a speedy recovery, our prayers are with him, his family and people of #Japan.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 8, 2022