உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ரணிலின் கருத்துக்கு அருட்தந்தை கண்டனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் சரியாக நடத்தப்படவில்லை என்ற ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
ரணிலின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த இங்கிலாந்து அரசு மற்றும் அவர்களின் உளவுத்துறையின் உதவி கோரப்படும்.
ரணிலின் கருத்து
மேலும், தாக்குதல்கள் குறித்து விசாரிக்க ஸ்கொட்லாந்து யார்டு, இன்டர்போல் மற்றும் பிற உலகளாவிய சட்ட அமுலாக்க அமைப்புகளின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியிருக்க வேண்டும் என்று ரணில் கூறியிருந்தார்.
தாக்குதல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு சர்வதேச உதவியை பெறுவதில் காலதாமதமான நடவடிக்கையை ரணில் எடுத்துள்ளார்.
அருட்தந்தையின் குற்றச்சாட்டு
இவர் பாதிக்கப்பட்டவர்களின் வலியை பயன்படுத்தி நாட்டின் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
ரணிலின் அறிக்கைகள் வெறும் ஏமாற்று வார்த்தைகள் என்பதால் அவரை நம்ப முடியாது. இவ்வாறான அறிக்கைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் நீதியை நாடுவோரையும் அவமதிக்கும் செயலாகும்.” என குற்றஞ்சாட்டியுள்ளார்.