மயிலத்தமடு அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதாவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை எதிர்ப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“மயிலுத்தமடு, மாதவனை பகுதிகளில் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்கள் பயன்படுத்தி வந்த நிலப்பகுதிகளை அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய இடங்களில் இருந்து மயிலத்தமடுவுக்கு வருகை தந்த சிங்கள மக்கள் அத்து மீறி காணிகளை அபகரித்து விவசாய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துமீறிய காணி அபகரிப்பு
அத்துடன் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்களின் கால்நடைகளை தாக்கி அநாகரிமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மயிலத்தமடு மக்கள் வாழ்வாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ளர்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து அத்துமீறிய காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமக்கான நீதி கோறி மட்டக்களப்பு கால்நடை பணியாளர்கள் 50 நாட்கள் கடந்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஆதரவு வழங்குவதாகவும் குறித்த போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
