வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம்
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றையதினம்(2.7.2026) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
இதன்போது வவுனியா மாநகரசபையின் முதல்வர் வடமாகாண ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டமையானது மாநகரசபைக்கு வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமையினை மீறும் செயற்பாடு எனவும் அதனை வன்மையா கண்டிப்பதாக மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் தெரிவிக்கப்பட்டது.

இதனை மட்டக்களப்பு மாநகரசபை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்களின் ஜனநாயக வாக்களிப்பினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினராகவும் மாநகரசபை உறுப்பினர்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு முதல்வராகவும் உள்ள நிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு வடமாகாண ஆளுனர் முன்னெடுத்த செயற்பாடுகள் ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14