மன்னாரில் பிரபல தொழிலதிபர் மீது தாக்குதல்! பழக்கடை உரிமையாளர் கைது
மன்னார் நகர பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய பழ விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (2.7.2026) மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பழக்கடை நடத்தி வருகின்ற நபரை மன்னார் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபருடன் இணைந்து மேலும் இருவர் குறித்த தொழிலதிபரை தாக்கும் சி.சி.ரிவி காணொளி காட்சி வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான தொழிலதிபர் முஹமட் பாஹிம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவருக்கும் இடையில் பழ விற்பனையில் ஏற்பட்ட நீண்ட கால தர்க்கம் காரணமாகவே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan