கொக்குத்தொடுவாயில் பொலிஸார் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை கண்டனத்திற்குரியது: ரவிகரன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், மனிதப் புதைகுழி அகழ்வில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது அங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸாரின் அச்சுறுத்தல் செயற்பாடு கண்டனத்திற்குரியதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள்
“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகள் என நம்பப்படும் இருவருடைய மனித எச்சங்கள் முற்றுமுழுதாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனித எச்சங்களில் துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட சில ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இலக்கங்கள் இருந்ததையும் அவதானிக்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது, இங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களைப் பொலிஸார் அங்கிருந்து விலகிச் செல்லுமாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையையும் அவதானிக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் மீதான கண்டனம்
ஏற்கனவே இந்த அகழ்வுப் பணி தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும்போது, ஊடகவியலாளர்களுக்கு செய்திசேகரிப்பதற்கு அனுமதி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க அகழ்வாய்வுப் பணிகளை செய்தி அறிக்கையிட வந்த ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டமை கண்டனத்திற்குரிய விடயமாகும்.

கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சபையில் அச்சம் வெளியிட்ட சாணக்கியன்(Video)
அத்தோடு இந்த மனிதப் புதைகுழி அகழ்வுகள் இலங்கையில் ஏற்கனவே 33 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இவ்வாறு ஏற்கனவே இடம்பெற்ற மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்கு சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்பதையும் அறியமுடிகின்றது.
அந்தவகையில் நீதிபதியையும், நீதிமன்றையும் நாம் முழுமையாக நம்புகின்றோம். இந்த அகழ்வுப்பணி தொடர்பில் உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
