நிறைவு செய்யப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று (26.01.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிறைவு செய்து வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நிலையியற் கட்டளைகள்
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நிறைவு செய்து வைக்கப்படும் போது, அதுவரை நாடாளுமன்றத்தால் பரிசீலிக்கப்படாத கேள்விகள் மற்றும் பிரேரணைகள் இரத்து செய்யப்படும், இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க மீண்டும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், நாடாளுமன்றத்தின் இணைப்புக் குழு, உயர் பதவிகளுக்கான குழு, தெரிவுக்குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தவிர மற்ற அனைத்துக் குழுக்களும் புதிய அமர்வின் தொடக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |