தாபன விதிக்கோவை திருத்தத்தில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை - வெளியான அறிவிப்பு
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தாபன விதிக்கோவையை விட ஊழல் எதிர்ப்புச் சட்டமே முதன்மை பெறும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சிறப்புரிமை அல்லது விலக்களிப்பு அளிக்கப்பட்ட அரச அதிகாரிகளைப் பொறுத்தவரையில் இது சாதகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு உரிமை, சிறப்புரிமை அல்லது விலக்களிப்பை மறுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் வகையில் தாபன விதிக்கோவையின் எந்தவொரு சரத்தும் வியாக்கியானம் செய்யப்படக்கூடாது என அமைச்சுச் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவை திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், அரச ஊழியர்களுக்கு முழுமையான விலக்களிப்பு வழங்கப்படவில்லை.
அத்துடன் அவர்கள் கடுமையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.