பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு
பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினைச் சேர்ந்த அதிகாரியொருவரினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஊடகமொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடவுச்சீட்டு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியதாகவும் அந்தக் குற்றச் செயலில் நிசாந்த என்பவர் ஈடுபட்டதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்கள் தயாரிப்பு
கடவுச்சீட்டுக்களை முறையான அடிப்படையில் விநியோகம் செய்வதற்கு திட்டமொன்றை தாம் முன்மொழிந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் மோசடியான முறையில் 17 கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச் செயலுடன் நிசாந்த என்ற நபருக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கருத்து வெளியிட்ட போது அந்த இடத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடமையாற்றிய நிசாந்த என்ற பெயருடையவர் தாமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் மோசடி இடம்பெற்றதாக தமக்கு தெரியவில்லை எனவும் அவ்வாறு மோசடி இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நற்பெயருக்கு களங்கம்
போலியாக குற்றம் சுமத்துவதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கமராக்கள் மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்வதன் மூலம் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
17 கடவுச்சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டிருந்தால் அவர்கள் யார் எந்த முகவரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்தவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக குறித்த நிசாந்த என்ற குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
