சங்கிலியன் தோரணை வாயில் புனரமைப்பு: முன்னாள் முதல்வர் பெருமிதம்
மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் யாழ். மரபுரிமை மைத்தின் உறுப்பினருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார் .
நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயிலை கடந்த ஞாயிற்றுக்ககிழமை (16.07.2023) மாலை திறந்து வைத்து தலைமை உரையை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்காக மரபுரிமைகளை பாதுகாக்கும் மையத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிறுவியிருந்தோம்.
எமது அமைப்பினை நிறுவும்போது இந்த அமைப்பு நிறுவியதுடன் அதன் செயற்பாடுகளும் முடிந்து விடும் என பலரும் சிந்தித்தார்கள். அப்படி நினைத்தவர்களுக்கு எமது முதல் பணியை செய்து முடித்துக் காட்டியுள்ளோம்.
சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு
யாழ். மரபுரிமை மையம் சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைக்க வேண்டும் என சிந்தித்த போது யாரிடம் நிதி கேட்பது சந்தேகம் நிலவியது .
வைத்திய கலாநிதி ரவிராஜ் மரபுரிமை பாதுகாப்பு அமைப்பின் உப தலைவராக இருக்கின்ற நிலையில் நாங்களே முன் உதாரணமாக சங்கிலியன் தோரணை வாயிலை புனரமைப்போம் அதற்கு நான் நிதி தருகிறேன்.
அவரின் பெருந்தன்மையால் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் தமிழர் வரலாற்றின் எச்சமான சங்கிலியன் தோரண வாயிலை புனரமைக்க முடிந்தது.
வைத்திய கலாநிதி ரவிராஜ் உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் எமது மண்ணிலே நின்று மக்களுக்கு சேவையை வழங்கிய ஒருவர்.
எமது மண் மீதும் எமது வரலாறுகள் மீதும் ஆழ்ந்த சிந்தனை உள்ள ஒருவர் என்ற நீதியில் அவரின் விடாத முயற்சியும் அர்ப்பணிப்பும் சங்கிலியன் தோரண வாயிலை பொதுமக்கள் பார்வையிடக் கூடிய வகையில் திறந்து வைப்பதற்கு உதவியாக இருந்தது.
அதேபோன்று மாந்திரிமனை யமுனா ஏரி ஆகியவற்றையும் புனரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது மரபுரிமை மையம் திட்டங்களை வகுத்துள்ள நிலையில் அதற்கு பாரிய நிதி பங்களிப்புத் தேவை.
மந்திரி மனையைப் புனரமைக்க வேண்டுமானால் சுமார் ஆறு தொடக்கம் எட்டு கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறித்த நிதியினை பெறுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும்.
அரசாங்கம் நிதி வழங்காத பட்சத்தில் எமது மரபுரிமைகளை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எமது வரலாறுகளை அடுத்த சந்ததிகளுக்கு எடுத்த செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெபாஸ்கரன் , இந்தியத் துணைத்தூதரக அதிகாரி பிரவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுரன சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் ஆறு திருமுருகன், தொல்பொருட் திணைக்களத்தின் யாழ்ப்பாணத்துக்கான உதவிப் பணிப்பாளர் பந்துலஜீவ யாழ். மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் நல்லூர் பிரதேச செயளாளர் எழிலரசி உற்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |