ஆளும் கட்சியின் 159 எம்.பிக்களை உடனடியாக விசாரிக்குமாறு அவசர முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு வெல்லும் தெற்கு அமைப்பொன்றினால் இன்று (02) காலை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டது.
ஐந்து காரணங்களின் கீழ் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை, பொதுமக்களின் நன்மைக்காக பயன்படுத்தாமல், ஜே.வி.பி (JVP) கட்சியின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்வதன் மூலம், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றை இழைத்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
2023-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09-இன் கீழ் இந்த விவகாரம் குறித்து அவசர விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஆணையத்தை கோரியுள்ளது.
குறித்த முறைப்பாட்டில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் 159 உறுப்பினர்களையும் வரவழைத்தல், அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் கட்சியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தல் ஆகிய ஐந்து காரணங்களின் கீழ் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளனர்.
கொழும்பில் தொழிலதிபரின் வீட்டில் திடீரென உயிரிழந்த அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan