வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (Photo)
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்தீபனால் குறித்த முறைப்பாடு இன்றையதினம் (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்திற்கு தன்னை நேற்று அழைத்து, நேற்றுமுன்தினம் (07) குருமன்காடு காளி கோவிலுக்கு அருகிலுள்ள நகரசபைக்கு சொந்தமான பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டடம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்று கொண்டுள்ளதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டை தன்மீது சுமத்தி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு நடவடிக்கை கடந்த முறையும் இடம்பெற்றுள்ளதாகவும், இது இரண்டாவது தடவையாகவும் தன்னை இலக்கு வைக்கப்பட்டு குறித்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், இதற்கு எதிராகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றையதினம் இலங்கை பொலிஸ்மா அதிபருக்கும், வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரிக்கும் எதிராக முறைப்பாடு ஒன்று பொலிஸ் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
