வெடுக்குநாறிமலை விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குறித்த முறைப்பாடு நேற்றைய தினம்(20) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி தினத்தன்று பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் வழிபாடுகளிற்காகச் சென்றிருந்த நிலையில் நீண்ட நேரம் வழிபாடாற்றுவதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, செல்லும் பாதைகளெங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு அனைவரும் அச்சுறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்டு வழிபாட்டுரிமைகள் மீறப்பட்டிருந்தது.
வழிபாட்டு உரிமை
பெருமளவில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் பங்குகொண்டிருந்த பூசை வழிபாடுகளில் தாகத்திற்கு அருந்துவதற்காக கொண்டு சென்ற குடிநீரைக் கூட பறித்து ஊற்றியும், தாங்கியில் வைக்கப்பட்டிருந்த நீரைத் திறந்து விட்டும், நீரை உள்ளே கொண்டு செல்ல விடாமல் தடுத்தும் மனிதாபிமானத்திற்கு விரோதமான செயல்களில் அவர்கள் செயற்பட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில், பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டு உரிமை, உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri