இலங்கைக்குள் காலூன்றும் சீன இராணுவம்!..கலக்கத்தில் அமெரிக்க உளவுத்துறை
இலங்கையில் சீன இராணுவத் தளம் ஒன்று அமைக்கப்படுமாயின் அது அமெரிக்காவிற்கும் அந்நாட்டினுடைய உளவுத்துறைக்கும் பாரிய பின்னடைவையே ஏற்படுத்தும் என பிரித்தானியாவில் வசிக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“போர் ஒன்று ஏற்படும் போது இந்து சமுத்திர பாதை மூடப்படுமாயின் அது சீனாவிற்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் இராணுவத் தளம் இருப்பது தனக்கு பாதுகாப்பை தரும் என சீனா கருதுகின்றது.
சீனா இந்து சமுத்திரத்தில் வலுவாக காலூன்றுமாயின், தாய்வான் போரில் அமெரிக்காவில் வெற்றி பெற முடியாது என்பதால் அமெரிக்கா இதை ஒரு அச்சுறுத்தலாக கருதுகின்றது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |