பெண்ணின் தங்கச்சங்கிலி அறுத்து செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் பெண்ணின் தங்கச்சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று கடையில் பொருட்களை வாங்கி திரும்பிக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் குறித்த பெண்ணிடம் வீடு ஒன்றை விசாரிப்பது போன்று நாடகமாடி குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சங்கிலியைப் பறிகொடுத்த பெண் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், மாங்குளம் நகரப்பகுதியில் இருக்கின்ற சிசிடிவி கேமரா பதிவுகளைச் சேகரித்து அதன் மூலம் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




