மட்டக்களப்பில் எரிவாயு அடுப்பு வெடித்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி பகுதியில் எரிவாயு அடுப்பு இன்று பகல் வெடித்துள்ளiமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவினை தயாரித்துவிட்டு மீண்டும் மதிய உணவு தயாரிப்பதற்காக அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் திராய்மடு, சுவிஸ்கிராமம் பகுதியிலும் வெடிப்புச் சம்பவம் ஒன்று
பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
மீண்டும் சரவணனை பார்க்க போன மயில்.. அங்கு நடந்த சம்பவம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam