கல்முனை புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடியவருக்கு எதிராக முறைப்பாடு (Photo)
சட்டவிரோதமாக கல்முனை புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை - கல்முனை மாநகர சபைக்கு அருகாமையில் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை தனக்கு சொந்தமானது என கூறி தனிநபர் ஒருவர் கட்டுமானம் ஒன்றினை மேற்கொள்ளத் தயாராகியுள்ளார்.
இதனை அறிந்த கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் சம்பவ இடத்திற்குச் சென்றதுடன் சட்டவிரோதமாக பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை தனக்கு உரித்தானது எனத் தெரிவித்த நபருடன் கலந்துரையாடிய பின்னர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதல்வர்,
கல்முனை புதிய பேருந்து நிலையமானது அரசாங்கத்தின் காணியாகும். இக்காணியில் தனிநபர் உறுதி ஒன்றினை கொண்டு வந்து தனக்கு இவ்விடத்தில் உரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு கட்டுமானம் ஒன்றினை நிர்மாணிக்க அடித்தளம் ஒன்றினை நிர்மாணிக்க முற்பட்டுள்ளார்.
குறித்த தனி நபரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளோம். சட்டம் அதன் கடமையினை செய்யும் என நம்புகின்றேன் என கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அரச காணிகளில் தனிநபர்கள் சிலர் சட்டவிரோதமாகக் கட்டடங்கள் அமைக்க முயற்சிப்பதுடன் மாநகர சபை அதனைத் தடுப்பதும் வழமையான சம்பவமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தனி நபரினால் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்பட்ட கற்கள் மண் உள்ளிட்ட பொருட்கள் மாநகரசபையினால் எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
