வெள்ளை வானில் வந்த குழுவினரின் சந்தேகத்திற்கிடமான நடத்தை - பொலிஸில் முறைப்பாடு
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன, தனது வீட்டின் அருகே வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத குழுவினரின் சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவருகிறது.
சந்தேகத்துக்குரிய வெள்ளை வான் கடந்த வியாழக்கிழமை காலை வந்ததாக அவர், தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
வானில் இருந்த ஒருவர் இறங்கி, தமது வீட்டுக் கதவில் உள்ள இலக்கத்தை அவதானித்து சென்றதாக, அயல் வீட்டுக்காரர் தனக்குத் தெரிவித்ததாகவும் அந்த முறைப்பாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் கொலை அச்சுறுத்தல் வந்ததாக முறையிட்ட போதும், பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam