சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு
திருகோணமலை-மூதூர் பொலிஸ் நிலையத்தில் புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 07ஆம் அன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் உதயன் (வயது 24) என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் 08ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமி கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி கற்றுவரும் மாணவி எனவும் தெரிய வருகின்றது.
இச்சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் செல்வநாயகம் உதயன் என்பவர் கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு இவ்வருடம் பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் இன்னுமொரு சிறுமியைக் கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இச்சிறுமி கடத்தப்பட்டு 10நாட்களுக்கு மேலாகியும்
மூதூர் பொலிஸாரால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்
அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
