மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Jaffna Northern Province of Sri Lanka
By Kajinthan Sep 04, 2025 02:00 PM GMT
Report

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இலங்கையர்களுக்கு நாளை கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

தமிழர் பகுதியில் இலங்கையர்களுக்கு நாளை கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு!

முறைப்பாடு

அத்தோடு, குறித்த நபர்கள் வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப்பினரான அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருனாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் இன்று(4) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

35 வருடங்களுக்கு முன்னர் ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும், யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! | Complaint Filed Digging Mandaitivu Burial Well

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.

தமிழர் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

தமிழர் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

நீதியான விசாரணை

அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்த குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! | Complaint Filed Digging Mandaitivu Burial Well

முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை பல்கலைக்கழகங்களின் நிலைமை குறித்து வெளியான முக்கிய தகவல்!

இலங்கை பல்கலைக்கழகங்களின் நிலைமை குறித்து வெளியான முக்கிய தகவல்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US