யாழில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு
யாழில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (02.04.2024) காலை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவது மற்றும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விசாரணை
கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக அவர்கள் மீது தெல்லிப்பளை பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, கல்வி செயற்பாடுகளில் தெள்ளிப்பளை பொலிஸாரின் அவசியமற்ற நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |