முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நட்டஈடு குறித்து வெளியான தகவல்
2022 ஆம் ஆண்டு அமைதியின்மையின் போது தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி இழப்பீடு கோரிய, எந்தவொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், இழப்பீடுகளை வழங்கவில்லை என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த வன்முறையின் போது தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்திலிருந்து இழப்பீடு பெற்றதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த விளக்கத்தை குறித்த அலுவலகம் வழங்கியுள்ளது.
இந்தநிலையில், இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம், 2022 ஆம் ஆண்டு உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு, இதுவரை 1.13 பில்லியன் ரூபாய்களை இழப்பீடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இழப்பீடு
இதில் அசையா சொத்து தொடர்பான 301 இழப்பீடுகளும் , அசையா சொத்து தொடர்பான 76 இழப்பீடுகளும் அடங்கும்.
இதற்கிடையில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வைத்து வெளியிட்ட தகவலின்படி, 2022 ஆம் ஆண்டு நடந்த அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது, தமது வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, 1.2 பில்லியன் ரூபாய் இழப்பீடுகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.
எனினும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அப்போதைய நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்திடமிருந்து இழப்பீடுகளை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இழப்பீடு வழங்கப்பட்டதற்கான முறையான ஆதாரம், இன்னும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |