உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள நட்டஈடு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, இழப்பீடுகளுக்கான அலுவலகம் 311 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (18.11.2024) உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம், நீதிமன்றத்திற்கு இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
மனுக்களின் விசாரணைகள்
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்ட விதம் தொடர்பான அறிக்கையை அடுத்த நீதிமன்ற திகதியில் சமர்ப்பிக்குமாறு மேலதிக மன்றாடியார் நாயகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணைகளை 2025 பெப்ரவரி 27க்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
