இந்தியாவுக்கு யாத்திரை போவதாக கூறி யாசகம் பெற்று வந்த பெண்கள் கைது
அநுராதபுரத்தில், பல்வேறு பொய்யான காரணங்களை கூறி, யாசகம் பெற்று வந்த 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசாய போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களை பின்தொடர்ந்து சென்ற 6 பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், கண் சத்திரசிகிச்சை, இந்தியாவிற்கு புனித யாத்திரை செல்வது போன்ற விசித்திரமான நோக்கங்களுக்காக யாசகத்தின் மூலம் பணம் வசூலித்தமை தெரியவந்துள்ளது.
முறைப்பாடுகள்
இந்த யாசகர்கள் தொடர்பில் ஏற்கனவே, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்திரீகர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.
இதன்படி, கைது செய்யப்பட்ட பெண்கள் தேவனம்பித்திஸ்ஸபுர, பதுலகம, வெஸ்ஸகிரிய, திசாவெவ, போன்ற இடங்களை சேர்ந்த 51 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
