தென்கொரியாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நட்டஈடு பெற்றுக் கொள்ள நடவடிக்கை..!
தென் கொரியாவில் அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்திற்கு 9 மில்லியன் ரூபா நட்டஈடு பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்டஈடு வழங்கப்படுமா?
உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஏதேனும் நட்டஈடு வழங்கப்படுமா என எதிர்க்கட்சி நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதன்போது, இளைஞரின் குடும்பத்திற்கு 9 மில்லியன் ரூபா நட்டஈடு பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார்.
சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை
உயிரழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
தூதரகங்களின் ஊடாக நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சப்ரீ குறிப்பிட்டுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
