விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள பணம்
கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்காக 9,368 விவசாயிகளின் கணக்குகளில் நாளை(19) 202 மில்லியன் ரூபா வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இழப்பீடு
திருகோணமலை மாவட்டத்தில் சேதமடைந்த 6,671 விவசாயிகளின் நெற்பயிர்களுக்கு 21 ஆம் திகதிக்குள் 98 மில்லியன் ரூபாய் வங்கி கணக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கான காப்பீட்டு இழப்பீடாக இதுவரை 306 மில்லியன் ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
