போரில் பாதிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்குத் தொடர்ச்சியாக சம்பளம்
யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயதின் பின்னரும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு 55 வயது வரை தற்போது சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும், 55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ ஓய்வூதிய கொடுப்பனவோ வழங்கப்படாததினால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Tennakoon) விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
அமைச்சரவையின் அங்கீகாரம்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, அவ்வாறான சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு 55 வயது நிறைவுடன் நிறுத்தப்படும் கொடுப்பனவை மேலும் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 10 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri
