அரச சேவையாளர்களுக்கு வேதனங்களை வழங்குவதில் சிரமம்! உரிய வரிகளை செலுத்துமாறு கோரப்படும் நிறுவனங்கள்!
அரச சேவையாளர்களுக்கு வேதனம் வழங்குவதில் அரசாங்கம் பணப்புழக்க சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இதனையடுத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது, முதல் காலாண்டு வரிகளை உரிய திகதிக்கு முன்னதாக செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கோரியுள்ளது
இறைவரி திணைக்கள ஆணையாளரும், ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவருமான சரத் அபேரத்ன இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரச சேவையாளர்களுக்கு வேதனங்களை செலுத்துவதற்காக இதுவரை திறைசேரியும் மத்திய வங்கியும் பல பில்லியன்களுக்கு பணத்தை அச்சடித்து வருகின்றன.
இதன் விளைவாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வாழ்க்கைச் செலவுக் குறியீடு உயர்ந்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து பல பெரிய நிறுவனங்களிடமிருந்து 59 பில்லியன் ரூபாய்கள் வசூலிக்கப்பட்டன.
இந்தநிலையில் எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வரி வசூலிப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
எனினும் தமது கோரிக்கைக்கு நிறுவனங்களிடம் இருந்து பதில்கள் கிடைக்கவில்லை என்று இறைவரி திணைக்கள ஆணையாளர் சரத் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் கையொப்பங்கள் அடங்கிய ரூபாய் நோட்டுகளை மத்திய வங்கி தொடர்ந்து அச்சடித்து வருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
