உயிரிழந்த கருணகரன் ராசசுந்தரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் ஏதிலிகள் சமூகம்
அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு மெல்போர்னின் ஏதிலிகள் சமூகம், (community of South East Melbourne) இலங்கையின் தமிழ் ஏதிலியான கருணகரன் ராசசுந்தரனின் துன்பகரமான மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினரை ஆதரித்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் நிகழ்ந்த ராசசுந்தரனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ஆதரவளிக்கக் குறித்த ஏதிலிகள் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த ஏதிலிகள் நிதியத்துக்கு 10 நாட்களில் சுமார் 6, 000 டொலர்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
முதன்முறை அல்ல...
கருணகரன் ராசசுந்தரன் 2013இல் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். சிட்னியில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்த அவரது விசாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நேரத்திலேயே அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் சபையின் நிறுவனர் அரான் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிர் பறிபோவது இது முதன்முறை அல்ல, ஒவ்வொரு பதினைந்து நாட்களிலும் யாரோ ஒருவர் தங்கள் உயிரைப் பறித்துக்கொள்வதைக் காண்பதாக அரான் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மொழி தெரியாமல், குறிப்பிட்ட வேலைத் திறன் இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் ஒற்றை தாயாக மாறியுள்ள ராசசுந்தனின் மனைவிக்கு வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும், எனினும் சமூகம் இன்னும் அவருக்கு ஆதரவளிக்கும் என்று தாம் நம்புவதாக அரான் மயில்வாகனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
