பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு பதிலாக ஜீ.எல்.பீரிஸ்
ருவாண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொள்ளவுள்ளார்.
இம்மாதம் 21 திகதி (இன்று) தொடக்கம் 25ம் திகதி வரை ருவாண்டாவில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த அமைப்பின் 54 அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
23ம் திகதி மாநாடு ஆரம்பம்
பிரித்தானிய இளவரசர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகிப்பார்கள்.பொதுநலவாய அமைப்பின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களின் மாநாடு 23ம் திகதி நடைபெறவுள்ளது.அதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புறப்பட்டுள்ளார்.
அதே போன்று ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே தலைமையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு 24-25ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
எனினும் இலங்கையின் சார்பில் ஜனாதிபதிக்குப் பதிலாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துக்கொள்ளவுள்ளார்.
