உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள முக்கிய வரி - வெளியான வர்த்தமானி அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் மக்கா சோளத்தின் மீது விதிக்கப்படும் சிறப்புப்பண்ட வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் மக்காச்சோளத்திற்கான வரி 50 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வரி விகிதம்
இந்த திருத்தப்பட்ட வரி விகிதம் மே 5, 2026 முதல் டிசம்பர் 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் 31, 2025 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் எண் 2469/12-இன் கீழ் இருந்த முந்தைய வரி விகிதமும் இதனுடன் திருத்தப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2026 மே மாதம் 04 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்..! காலக்கெடுவை நெருங்கும் த.வெ.க விஜய் - பின்னணியில் அவசர பேச்சுவார்த்தைகள்
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan