கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்
அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற போது அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் பிரதேச செயலக கேட்ப்போர் கூட்டத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அமுல்படுத்துகின்ற போது அதனை விரைவாக முடித்து வைப்பதில் அரசாங்க அதிகாரிகள் தங்களுடைய பங்களிப்புகளை செய்ய வேண்டும்.
கோவிட் -19 தாக்கத்தின் காரணமாக இலங்கையினுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கமானது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற போது அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும்.
ஒவ்வொரு திணைக்களங்களும் தேசிய ரீதியாக அமுல்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை எமக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்தால் தொடர்ந்தும் எம்மால் அதனுடைய குறை நிறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.












தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
