சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் : ஜனாதிபதி

Sri Lanka Police Nandalal Weerasinghe Anura Kumara Dissanayaka President of Sri lanka Priyantha Weerasooriya
By Rakesh Feb 04, 2026 09:52 AM GMT
Report

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக நிறுவன மட்டத்தில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம்

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான உலகளாவிய கொள்கைகளை நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்குகிறது. 

இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை - LIVE

இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை - LIVE

மேலும், பேரழிவு ஆயுதங்களை தயாரிப்பதற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான கொள்கைகளையும் இது உருவாக்குகிறது.

அதன்போது, அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டிய 40 பரிந்துரைகளை நிதி நடவடிக்கை பணிக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் : ஜனாதிபதி | Committed Creating Better President S Statement

இதன் மூலம்,சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்க ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் உள்ள கட்டமைப்புகள், அவை வினைத்திறனாக செயல்படுத்தப்பட்டுள்ள விதம், சட்டக் கட்டமைப்பு, வள ஒதுக்கீடு, செயல்திறன் மற்றும் தரப்பினர்களின் இயலுமை உள்ளிட்ட அளவுகோல்கள் தொடர்பாக ஆழமான பகுப்பாய்வு இடம்பெறும்.

இந்த செயல்முறை பரஸ்பர மதிப்பீடு என்று அழைக்கப்படுகிறது.

கணக்காய்வு 

இது ஒரு தேசிய அளவிலான கணக்காய்வு செயல்முறை என்பதுடன், குறித்த பிராந்திய மேற்பார்வை நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

அதன்படி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவினால் இலங்கையில் அந்த மதிப்பீட்டு மேற்பார்வை செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் : ஜனாதிபதி | Committed Creating Better President S Statement

இதற்கான ஆலோசனையை அதன் முன்னாள் நிறைவேற்றுச் செயலாளரான கலாநிதி Gordon Hook வழங்குகிறார்.

உள்நாட்டில் இந்தச் செயல்பாட்டிற்காக சுமார் 25 தரப்பினர் அரச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதுடன்,மேலும் அதன் ஒருங்கிணைப்புப் பணிகள், இலங்கை மத்திய வங்கியில் நிறுவப்பட்ட நிதி புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட விரோத பணப்பரிமாற்றத்தைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான செயற்பாட்டுக் குழுவினால், குறித்த மதிப்பீட்டுச் செயல்பாட்டின் போது இந்த தரப்பினர்களால் செயல்படுத்தப்பட வேண்டிய செயல் திட்டங்களின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

இலங்கை இதற்கு முன்பு 2006 மற்றும் 2014-2015 ஆம் ஆண்டுகளில் இந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டதுடன், அதில் பின்னடைவை சந்தித்து 2017 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

நம்பகத்தன்மை

தற்போதைய அரசாங்கம் சர்வதேச அளவில் இலங்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வலுவான அரசியல் தலைமையை வழங்குவதால், இந்த திட்டத்தை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதி வெற்றிபெறச் செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் : ஜனாதிபதி | Committed Creating Better President S Statement

நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தாமதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த விடயங்களை தாமதப்படுத்தாமல் தேவையான தொழில்நுட்ப திருத்தங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.

பல அரச நிறுவனங்களில் மனிதவளப் பற்றாக்குறை மதிப்பீட்டுச் செயல்முறைக்குத் தடையாக உள்ளதாகத் தெரியவந்ததோடு, தற்போதுள்ள அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறும், நிர்வாக தாமதங்களைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE

சுதந்திர தின கரிநாள் போராட்டம்! கிளிநொச்சியில் குவிந்த பெருந்திரளான மக்கள் -- LIVE

ஒரே அதிகாரி பல பதவிகளில் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களை சீர்செய்வதற்கும், பொதுச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி பதவி உயர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளை விரைவுபடுத்துமாறும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி , மதிப்பீட்டுச் செயல்முறைக்காகப் பயிற்சி பெற்ற அதிகாரிகளை தொடர்ச்சியாக இடமாற்றம் செய்வதால் ஏற்படும் பின்னடைவைத் தவிர்க்க, அடுத்த நவம்பர் மாதம் மதிப்பீடுகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதே பதவிகளில் பணியாற்றும் வகையில் சுற்றறிக்கை வெளியிடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த மதிப்பீட்டு செயல்முறையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சிறப்பு செயலணியின் அறிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

விசாரணை 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உட்பட அமைச்சின் செயலாளர்கள், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டவரைஞர் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US