உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்: தேசிய மக்கள் சக்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு விரைந்து திகதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
இதனால் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க மற்றொரு சூழ்ச்சியைப் பயன்படுத்த முடியாது என்று ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இன்று (06.032023) தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சியை அரசு கைவிடாது. எனவே தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் வேறு தந்திரத்தை பயன்படுத்துவதை தடுப்பதற்கு விரைவில் திகதியை நிர்ணயிப்பது மாத்திரமே என்று ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தல் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் ஒரு யோசனையைக் கொண்டு வருவதன் மூலம் அதை ஒத்திவைக்க சதி செய்ய அரசாங்கத்திற்கு போதுமான அவகாசம் உள்ளது.
அத்தகைய நடவடிக்கையைத் தடுப்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கைளிலேயே உள்ளது
என்றும் அவர் கூறியுள்ளார்.




