தொடரும் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான ஆணைக்குழுவின் செயற்பாடுகள்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தொடர்ந்தும் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது.
2015ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய போது, நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த ஊழல் முறைப்பாடுகளை தொடர்ந்து, இந்த முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை பெறப்பட்டுள்ள உத்தரவுகளின்படி, நடவடிக்கைகள் செயற்படுத்தப்படவுள்ளன. இதன்படி அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை கோப்பு, தேவையான நடவடிக்கைக்காக, லஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை
இதுவரை 69 வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது அவையாவும் சட்டப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதில் அமைச்சர் ஜயக்கொடியின் கோப்பு 49ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 25 வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகைகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 8 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாக அமைச்சர் மற்றும் இரண்டு பேருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



